அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய காவலாளியின் சடலம் மீட்பு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). பரணி நகரில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர், தனது உறவினர் ஒருவரின் விஷேசத்தில்

News image
Updated On :13 டிசம்பர் 2013, 12:50 pm

முத்துகுமார்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மூழ்கிய காவலாளியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மீட்டனர்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சுப்பிரமணியன் (42). பரணி நகரில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர், தனது உறவினர் ஒருவரின் விஷேசத்தில் வியாழக்கிழமை பங்கேற்று விட்டு வண்ணார்பேட்டை தாமிரவருணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவர், தண்ணீரில் மூழ்கினார்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வெட்டும்பெருமாள் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை மாலை வரை அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இருள் சூழ்ந்ததால் மீட்புப்பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையில் தீயணைப்பு வீரர்கள், சுப்பிரமணியனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.