விருதுநகர் அருகே பெண்ணிடம் ரூ.லட்சம் வாங்கி திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன்களுக்கு 6 மாத சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர் பிரேமலதா(45). இவரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் அவரது மகன்களான ராதாகிருஷ்ணன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து கடந்த 2008ல் ரூ.3 லட்சம் கடன் பெற்றார்களாம். ஆனால், குறிப்பிட்ட நாள்கள் கடந்த பின்னும் பணத்தை திருப்பித் தராமல் நாள்களை நகர்த்தி வந்தார்களாம்.
இதையடுத்து, பணம் அவசரமாக தேவைப்படுவதாக கூறியுள்ளார். பின்னர் ரூ.3 லட்சத்திற்கு வங்கி காசோலையாக அளித்துள்ளனர். அதை விருதுநகர் பகுதியில் உள்ள வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணமில்லை என திரும்பி வந்தது. இது குறித்து திரும்ப அவர்களிடம் கேட்டதற்கு அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாகவும் தந்தை, மகன்கள் பிரேமலதாவை மிரட்டினார்களாம்.
இது தொடர்பாக விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் பிரேமலதா புகார் செய்தார். அதன் பேரி்ல் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிக்கட்டமாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி பிரிட்டா பெண்ணிடம் பணத்தை மோசடி செய்த தந்தை, மகன்கள் ஆகியோருக்கு 6 மாதம் சிறைதண்டனையும், அதோடு வாங்கிய பணத்தை திருப்பித்தரவும் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.