இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாக இருந்த இளம் பெண் பலாத்காரம்: இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:15 pm

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள இனாம் கரிசல்குளம், கீழபொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் ராமேஸ்வரி (20). இவர் இங்குள்ள தனது அக்காள் முத்துமாரி (35) என்பவர் வீட்டில் இருந்துள்ளார். முத்துமாரி வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டினுள் இருந்து லுங்கி மட்டும் அணிந்த நிலையில் பொன்னுச்சாமி மகன் பாண்டியராஜன் (35) என்பவர் வெளியே வந்துள்ளார். ஏன் என் வீட்டிலிருந்து வருகிறாய் என்று கேட்டதற்கு, முத்துமாரியை தள்ளிவிட்டுவிட்டு பாண்டியராஜன் ஓடி விட்டாராம். வீட்டினுள் சென்று பார்த்தபோது, உடலில் ஆடைகள் இல்லாத நிலையில் ராமேஸ்வரி கிடந்தாராம். வீட்டினுள் பாண்டியராஜன் அத்துமீறி நுழைந்து தன்னை பலாத்காரம் செய்ததாக ராமேஸ்வரி கூறியுள்ளார்.

இது குறித்து முத்துமாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரி்ல போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.