அழகப்பா பல்கலைக்கழக தேர்வுக்கான நுழைவுச் சீட்டு விநியோகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரத்தில் கல்வி இயக்கத்தில் பயின்று வரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு விநியோகம்
Updated on
1 min read

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரத்தில் கல்வி இயக்கத்தில் பயின்று வரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் விருதுநகர் மையத்தின் முதன்மை நிர்வாகி பூ.காசிராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இப்பல்கலையில் தொலை தூரக் கல்வி இயக்கத்தின் மூலம் இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு இம்மாதம் 26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரி-15ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்தவர்களை தவிர, நேரடியாக வங்கி வரைவோலை எடுத்து அனுப்பியவர்களுக்கு நுழைவுச் சீட்டுக்கள் இம்மையத்திற்கு வந்துள்ளது. அதனால், கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் உடனே வந்து நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் படி முதன்மை நிர்வாகி பூ.காசிராமன் மாணவ, மாணவிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com