சிதம்பரத்தில் பார்சல் சர்வீஸ் முகவர் தற்கொலை!
சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (48). இவருக்கு திருமணமாகி 3 வருடமாகிறது. மனைவி பெயர் காயத்திரி. ஒன்றரை வயதில் சிவக்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆனந்தன்


சிதம்பரத்தில் தனது கடையில் பார்சல் சர்வீஸ் முகவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (48). இவருக்கு திருமணமாகி 3 வருடமாகிறது. மனைவி பெயர் காயத்திரி. ஒன்றரை வயதில் சிவக்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆனந்தன் பஸ்நிலையம் அருகே உள்ள கொத்தங்குடித்தெருவில் கடை வாடகைக்கு எடுத்து பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த டிச.12-ம் தேதி முதல் ஆனந்தன் வீட்டிற்கு வரவில்லை. கடையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை காலை கடை ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்தது. கடைக்கு உள்ளே ஃபேனில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி காயத்திரி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...