வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக மனைவி கணவன் மீது புகார்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மெய்யப்பன் என்பவரது மகன் சாந்தமூர்த்திக்கும், விருதுநகர் அருகே ஆமத்தூரைச் சேர்ந்த தனலட்சுமி(25) என்பவருக்கும் கடந்தாண்டு
Updated on
1 min read

விருதுநகர் அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மெய்யப்பன் என்பவரது மகன் சாந்தமூர்த்திக்கும், விருதுநகர் அருகே ஆமத்தூரைச் சேர்ந்த தனலட்சுமி(25) என்பவருக்கும் கடந்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, வரதட்சணையாக 21 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான சீதான பொருள்களாக கொடுத்தார்களாம்.

இதையடுத்து, கணவர் குடும்பத்தாருடன் நெய்க்காரப்பட்டியில் குடியிருந்து வந்தாராம். அப்போது, மேலும் நகையும் பணமும் கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் என கணவர் மற்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்ததால் குழந்தை பெறுவதற்காக தனது தாய் வீட்டிற்கு வந்தாராம். ஆனால், குழந்தை பிறந்த 6 மாதமான நிலையில் கணவர் குடும்பத்தார் யாரும் பார்க்கவும், என்னை அழைத்துச் செல்லவும் வரவில்லை. இகு குறித்து கேட்டதற்கு   நகை பணம் கொண்டு வந்தால் தான் வருவதாக தகவல் தெரிவித்தார்களாம்.

எனவே இது தொடர்பாக ஆத்திரம் அடைந்த தனலட்சுமி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்தார். அதன் பேரில் தனலட்சுமியின் கணவர் சாந்தமூர்த்தி, அவரது தந்தை மெய்யப்பன், தாயார் தேவி, உறவினர்களான நாகஜோதி மற்றும் நாகையா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com