வணிக வரித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் பணிகள் பாதிப்பு

விருதுநகரில் வணிக வரித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அலுவலகமே வெறிச்சோடி காணப்பட்டது. இப்போராட்டத்தின் காரணமாக வியாபாரிகளுக்கு உரிமம்
வணிக வரித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
Updated on
1 min read

விருதுநகரில் வணிக வரித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அலுவலகமே வெறிச்சோடி காணப்பட்டது. இப்போராட்டத்தின் காரணமாக வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் வணிக வரித்துறை அலுவலக சங்கத்தினர், இந்த அலுவலகங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதோடு, போதுமான பணியாளர்கள் இல்லாததால் ஊழியர்களுக்கு வேலைப்பளுவை ஏற்படுத்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை தொடங்கி, தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் 68 பேர் வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், 7 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இதுபோன்ற காரணங்களால் அலுவலகத்தில் அன்றாட பணிகளான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குதல், வரி தொடர்பான படிவங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால்   அலுவலக வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com