ஆதார் அடையாள அட்டையை காரணம் கூறி சிலிண்டருக்கான அரசு மானியத்தை நிறுத்தக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

ஆதார் அடையாள அட்டையை காரணமாகக் கூறி எரிவாயு உருளைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்டோன் எரிவாயு விநியோக மையத்தை பொதுமக்கள்
ஆதார் அடையாள அட்டையை காரணம் கூறி சிலிண்டருக்கான அரசு மானியத்தை நிறுத்தக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை
Updated on
1 min read

ஆதார் அடையாள அட்டையை காரணமாகக் கூறி எரிவாயு உருளைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்டோன் எரிவாயு விநியோக மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர் நகராட்சி 22,23 ஆகிய வார்டு பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் கொடுக்காத பொதுமக்களுக்கு விலை கூடுதலாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்துள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பேருக்கு மேல் அடையாள அட்டை கிடைக்கவில்லை. அதோடு, எடுக்காதவர்களும் நிறைய பேர்கள் வரையில் உள்ளனர்.

இந்நிலையில் விநியோக மையத்தின் பணியாளர்கள் மானியம் வரவில்லை எனக் கூறி கூடுதலாக வசூல் செய்கிறார்களாம். இது தொடர்பாக 23-வது வார்டு நகராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் திரண்டு சென்று விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள இன்டோன் எரிவாயு சிலிண்டர் விநியோக மையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து சம்பவம் அறிந்த மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்தனர். அதையடுத்து, போலீஸார் மற்றும் எரிவாயு விநியோக மையத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் பொதுமக்களின் சார்பாக நகராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகையில், எக்காரணம் கொண்டும் அரசு கெடு விதித்துள்ள நாள் வரையில் ஆதார் அடையாள அட்டையை காரணமாக கூறி எரிவாயுக்கு கொடுக்கும் மானியத்தை மத்திய அரசு நிறுத்தக் கூடாது.

பொதுமக்களிடம் விநியோகம் செய்யும் போது பணியாளர்கள் கூடுதலாக வசூல் செய்யாமல், எப்போதும் போல் கொடுக்கும் விலையிலேயே வழங்க வேண்டும் என கூறினார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் எரிவாயு மையத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com