அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகளான கழிவு நீர் வாய்க்கால், குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி அலுலகத்தை முற்றுகையிட்டு
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

அடிப்படை வசதிகளான கழிவு நீர் வாய்க்கால், குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி அலுலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பாத்திமாநகர், ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர் சிலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவு நீர் வாறுகால் வசதி மற்றும் சாலை ஆகிய வசதியில்லாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, கூலி வேலைக்கு செல்கிறவர்களாக இருப்பதால் குடிதண்ணீரை விலை கொடுத்தே அல்லது அருகில் ஊராட்சி பகுதிகளில் சென்று  எடுத்து வரமுடியாத சூழ்நிலை உள்ளது.

இதை உடனே செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் நகராட்சி உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில்  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த நகரமைப்பு அலுவலர் தயாநிதி உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் வந்ததும் விரைவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com