விருதுநகர் அருகே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை தொடங்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை 4 வழிச்சாலையில் பஸ் நிறுத்தம் எதிரே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இக்குறிப்பிட்ட இடத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் ஆகியோர் பஸ் ஏறிச் செல்வது வழக்கமாகும். ஆனால், டாஸ்மாக் பாரை காலையிலேயே திறந்து விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அதோடு, மதுபோதையில் தகாத வார்த்தைகளையும் பேசி இடையூறு ஏற்படுத்தியும் வந்தனர். இதைத் தொடர்ந்து இக்கடையை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, இக்குறிப்பிட்ட கடையை சூலக்கரை-தாதம்பட்டி சாலையில் உள்ள கணபதி நகர் பகுதியில் செவ்வாய்கிழமை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றது. இதையறிந்த இப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சூலக்கரை காவல் ஆய்வாளர் அப்பாத்துரை உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, பொதுமக்களுக்கு இடையூராக கடை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றதை அடுத்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.