இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதால், தற்காப்புக்காக து்பபாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வருவதால், தற்காப்புக்காக து்பபாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து விருதுநகர் நகர இந்து முன்னணி சார்பில் அதன் தலைவர்  பி.சி.ஈஸ்வரன், வருவாய் அலுவலர் முனுசாமியிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுபோன்ற மிரட்டல்களால் பொறுப்புக்களை சரிவர செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக நாங்கள் புகார் செய்ததன் அடிப்படையில் காவல் துறையினர் நெல்லை மாவட்டம்,  கடையநல்லூரைச் சேர்ந்த இத்திரியாஸ் அப்பாஸ், சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகமது செரீப் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தற்போது இந்து முன்னணியின் தலைமை அலுவலகத்திற்கு எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றும் ஜன-1.2014 என்றும், தமிழ்நாடு அரசு முத்திரையும், இந்து முன்னணி தலைவர்களும் அல்லாவின் புனித ஜிகாத்தில் அல்லாவிற்கே என உருது மொழியில் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ளனர். அதோடு, சிவகாசி முகவரியும், ராஜபாளையம் தலைமை தபால் நிலையம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபோன்று தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இவர்களிடம் இருந்து எங்கள் உயிரையும், உடமையும் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலும், தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்த மனுவில் இந்து முன்னணி அமைப்பின்  நகரத் தலைவர் பி.சி.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com