கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராமனுஜம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பூமிராஜா, மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், வட்டார நிர்வாகி சிங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி மூப்பின் அடிப்படையில் வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.