எடியூரப்பா வரவால் பாஜக முழு வலிமை பெறும்: மதுரையில் ஈஸ்வரப்பா பேட்டி

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் கர்நாடக மாநில பாஜக தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா செவ்வாய்க்கிழமை இன்று குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
எடியூரப்பா வரவால் பாஜக முழு வலிமை பெறும்: மதுரையில் ஈஸ்வரப்பா பேட்டி
Updated on
1 min read

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் கர்நாடக மாநில பாஜக தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா செவ்வாய்க்கிழமை இன்று குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது பாஜக இரண்டாகப் பிரிந்தது.  இதை அடுத்து காங்கிரஸ் அங்கே வெற்றி பெற முடிந்தது. பாஜகவின் ஓட்டுகள் பிரிந்ததாலேயே அவர்கள் வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில் தற்போது நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தாய்க் கட்சிக்கு பி.எஸ்.எடியூரப்பா வரவிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் பாஜக கர்நாடகத்தில் மீண்டும் தமது பலத்தைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெல்வோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் நரேந்திரமோடி அலை வீசுகிறது. அண்மையில் நடந்து முடிந்த 4 மாநிலத் தேர்தலுக்குப் பின் அது அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸை எதிர்த்து பாஜக வரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com