ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் முடக்கம்: உற்பத்தியாளர் கவலை

வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் வரத்து முற்றிலும் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் முற்றிலும் முடங்கிவிட்டது.
ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் முடக்கம்: உற்பத்தியாளர் கவலை
Updated on
1 min read

வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் வரத்து முற்றிலும் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் முற்றிலும் முடங்கிவிட்டது.

 தென்மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஈரோடு ஜவுளிச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. இங்கு கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ய வாரந்தோறும் வருவது வழக்கம்.

 பொங்கல் சீசன் முடிவடைந்த பின்னர் வெளியூர் வியாபாரிகள் வரத்து குறைந்துவிட்டதால் சில வாரங்களாக சந்தை களையிழந்து காணப்படுகிறது. இந்த வாரம் வியாபாரிகள் வரத்து முற்றிலும் குறைந்தவிட்டதால் சந்தையில் வர்த்தகம் முடங்கிவிட்டது.

 இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி வியாபாரிகள் சங்கத் தலைவர் நூர்சேட் கூறியது:

 சீசன் முடிந்துவிட்டதால் ஜவுளி உற்பத்தியாளர்களும் இன்னும் உற்பத்தியை நிறுத்திவைத்துள்ளனர். அடுத்த வாரம் ஜவுளி உற்பத்தி தொடங்கும். அதற்கடுத்த வாரம் ஜவுளிச்சந்தையில் கோடை கால ஆடைகள் அதிக அளவில் விற்பனைக்கு வரும்.

 அதற்குப்பின்னர்தான் ஜவுளிச்சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வருவார்கள். வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளதால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com