

காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில் காதல் ஜோடிகளுக்கு மஞ்சள் கயிறு, மாலை வழங்கி இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலர் தினத்தையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்காவில் வெளியூரை சேர்ந்த காதல் ஜோடிகள் அதிக எண்ணிக்கையில் வியாழக்கிழமை கூடினர். அப்போது பூங்காவில் தயாராக இருந்த இந்து முன்னணியினர் கையில் வைத்திருந்த மஞ்சள் கயிறு, மாலை ஆகியவற்றை காதல் ஜோடிகளிடம் வழங்கி மாலை அணிவித்து, மஞ்சள் கயிறை காதலிகளுக்கு கட்டும்படி வலியுறுத்தினர். ஒருசிலர் இதற்கு ஒப்புக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவிட்டு பூங்காவில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இதேபோல, காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட டீசர்ட்களை அணிந்திருந்த இளைஞர்கள், காதலர்களிடம் சென்று அறிவுரை கூறினர். காதல் என்ற போர்வையில் ஏமாந்து வாழ்க்கையை பாழாக்கிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். காதலுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் துண்டுப் பிரசுரம் வழங்கினர். அதில் காதல் செய்வீர், சாதி மறுப்பு திருமணம் செய்வீர் என்ற வாசகங்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.