ஏர்-கன் துப்பாக்கியால் மனைவியைத் தாக்கியவர் கைது

மதுரையில் ஏர்கன் துப்பாக்கியால் மனைவியைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

மதுரையில் ஏர்கன் துப்பாக்கியால் மனைவியைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை பூக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்ந்த் (42). இவரது  மனைவி காளீஸ்வரி. இவர் மில்லில் வேலை செய்கிறார். குடிப்பழக்கம் உள்ள ஆனந்துக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், இன்று காலை தகராறு முற்றி, கையில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியின் பின்புறத்தால் மனைவியை 5 இடங்களில் தாக்கியுள்ளார் ஆனந்த். தகவல் அறிந்த போலீஸார் ஏர் கன் துப்பாக்கியைக் கைப்பற்றிய  போலீஸார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com