ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம்: சரத்குமார் கண்டனம்

ஐதராபாத்தில் வியாழன்கிழமை இரவு அடுத்தடுத்து மூன்று இடங்களி்ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் அனைவரையும்
Updated on
1 min read

ஐதராபாத்தில் வியாழன்கிழமை இரவு அடுத்தடுத்து நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்திற்கு அகிலஇந்திய சமத்துவமக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்:-ஐதராபாத்தில் வியாழன்கிழமை இரவு அடுத்தடுத்து மூன்று இடங்களி்ல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவத்தில் 15க்கும் மேற்ப்ட்டோர் உயிரிழந்தும்,50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.தீவிரவாதிகளால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள கொலை வெறி தாக்குதலால்,ஒருபுறம் உயிர்சேதமும்,பொருள் சேதமும் ஏற்பட்டநிலையிலும் மறுபுறம் மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக்கப்பட்டுள்ளதையும் நாம் உணரமுடிகிறது.அரசின் உள்துறை,பாதுகாப்புதுறை,உளவுத்துறை போன்றவற்றின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்பதை இக்கோர சம்பவம் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.ஐதராபாத் மட்டுமல்லாது இந்தியமக்கள் அனைவரும் விழிப்போடு இருக்கவேண்டும். இந்த கொடுஞ்செயலை புரிந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது கொலைவெறியை வன்மையாக கண்டிப்பதோடு,உயிரிழந்தோர் மற்றும்  காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய,மாநில அரசுகள் உடனடி நிவாரண நிதிகள் செய்திடவேண்டும்.தங்கள் சொந்தபந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கும் அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பி்ல் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com