குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 15-ல் ஆர்ப்பாட்டம்: டாக்டர் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அறிவித்தது போல வற்ட்சியில் பாதிக்கப்பட்ட தென்தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு15ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர்பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 15-ம் தேதி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி. தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில்:

தமிழக அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அறிவித்தது போல வற்ட்சியில் பாதிக்கப்பட்ட தென்தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு15ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யதடைவிதித்ததை வரவேற்கிறேன். நிலத்தடி நீர் கொள்ளையர்கள் தற்போதுபொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு லாரி மூலம் அரசு தண்ணீர் விநியோகிப்பதை தடை ஏற்படுத்தக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாற்றை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற மார்ச்15-ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம நடைபெறும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com