இளம்பெண் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்

இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
Updated on
1 min read

இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலை வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் நாச்சிமுத்து (எ) மாணிக்கம். இவரது மனைவி அமுதா (30). இவர் கே.என்.கே. சாலையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கார்த்திக்சாமி (23) என்பவரும் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர்கள் இருவர் இடையே நெருங்கிய நட்பு இருந்து வந்ததாம். இந்நிலையில், கார்த்திக்சாமியிடம், அமுதா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ஆத்திரம் அடைந்த கார்த்திக்சாமி, அமுதாவின் கழுத்தில் கயிற்றை இறுக்கி கொலை செய்தாராம். இச்சம்பவம் 31.7.2008-ல் நடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்சாமியை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சர்வமங்கலா, குற்றஞ்சாட்டப்பட்ட கார்த்திக்சாமிக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் துரை சக்திவேல் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com