மத்திய அரசின் பட்ஜெட்டில் வளர்ச்சிதிட்டங்கள் எதுவும் இல்லை என அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.
நாடாளுமன்றத்தில் மத்தியநிதிஅமைச்சர் சமர்ப்பத்திருக்கும் நிதிநிலை அறிக்கை வழக்கமான நிதி ஒதுக்கீடுகளில் ஏற்றத்தாழ்வுகளை அறிவித்திருப்பதை தவிர சிறப்பான அம்சங்கள் எதுவும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் தொடர்ந்து விலைவாசி உயர்வு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்று பலவகைககளிலும் பாதிக்கப்பட்டிருக்கு்ம ஏழைஎளிய நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக இல்லை என்றே கருதலாம்.
ஏற்கனவே உயர்ந்திருக்கின்ற விலைவாசி உயர்வைக் குறைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை.தமிழகத்தில் தூத்துகுடியில் ரூ7,500கோடிசெலவில் புதிய துறைமுகம் ,சென்னை-பெங்களூரு இடையில் புதிய தொழில்நுட்ப பாதை அமைத்தல் என்ற அறிவிப்புகளை தவிர வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தகுந்த நிவாரணம் ஏதும் வழங்கப்படாதது வருத்தம்அளிப்பதாக உள்ளது.
செல்போன் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் ரூ2ஆயிரத்திற்கு மேல் உள்ள செல்போன்களுக்கு 6சத வரிவிதிப்பு முறையானதல்ல.இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மெகா திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
தேசியஊரக வேலைவாய்ப்புதிட்டத்திற்கு ரூ33ஆயிரம்கோடி ஒதுக்கியிருப்பதன் மூலம் வேலைவாய்ப்பு பயங்களை அதிகப்படுத்தவேண்டும்,மேலும் அத்தொழிலாளர்களை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளி்ல் ஈடுபடுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
நிலக்கரி சுரங்கதிட்டத்தில் தனியார் ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்திருக்கும் அதேவேளை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காமல்அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் கண்காணிப்பது மிகவும் அவசியம் என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
அன்னிய முதலீட்டை வரவேற்று அதற்கென உட்கட்டமைப்பை விரிவாக்கி கொண்டே போவது உலகின் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற மிகபெரிய ஜனநாயக நாட்டிற்கு மிகுந்த பலனை நிச்சயம் கொடுக்காது .ஏதோ கையில்இருப்பதை பிரித்து கொடுத்து விடுகிறேன்,
எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வது போல் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையான திட்டங்கள் எதையு்ம நிதியமைச்சர் அறிவிக்காதது வருத்தமளிக்கிறது.
தனிநபர் வருமான வரிவிதிப்பை பொறுத்தமட்டில் எந்தவித சலுகைகளும் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
தற்போதைய விலைவாசி நிலவரம்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு போன்றவற்றின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ5லட்சம் வரை வருமான வரிவிலக்கு அளித்திருந்தால் நியாயமானதாக இருந்திருக்கும் என்று சமத்துவ மக்கள் சார்பில் வலியுறுத்த விரும்புகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.