பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது: 20க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை மாவட்டம் பாலமேடில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி 2 மணியுடன் நிறைவடைந்தது.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் பாலமேடில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி 2 மணியுடன் நிறைவடைந்தது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட நேரம் மட்டுமே போட்டி நடைபெற வேண்டும் என்று நிபந்தனையுடன் கண்காணிக்கப்பட்டது. 2 மணி அளவில் போட்டி நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் பங்கு பெற்ற மாடு உரிமையாளர்கள், போடியில் கலந்துகொண்டு மாடுகளின் திமில்களைப் பிடித்து அடக்கிய மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோருக்கு தங்கக்காசுகள், பீரோ, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், வேட்டி, துண்டு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சுழற்கோப்பையும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

முன்னதாக, மருத்துவப் பரிசோதனையின்றி வந்த மாடுகளுக்கு அனுமதி அளிக்காததால் மாடு உரிமையாளர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

450க்கும் மேற்பட்ட மாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தன. ஆனால், முறையான அனுமதி மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட சுமார் 300 மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடு பிடி வீரர்களில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ஐவரும் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com