அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 35 பேர் காயம்

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட 35 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 35 பேர் காயம்
Updated on
1 min read

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட 35 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தமிழர் வீர விளையாட்டு என்று புகழப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெறும். இந்த வருடம் ஜல்லிக் கட்டுப் போட்டி, புதன்கிழமை இன்று காலை அலங்காநல்லூரில் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டில் 473 காளைகள் பங்கேற்றன. காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் போட்டியின்போது, காளைகளை துன்புறுத்தாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இந்த ஏற்பாடுகளை பொதுமக்கள் பெருமளவில் வரவேற்றனர். இந்த முறை போட்டி மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உரிய முறையில் நடைபெற்றது. மேலும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு காரணமாக சலசலப்பின்றி சிறப்பாக முடிந்ததாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் மாடுகள் முட்டித்தள்ளியதிலும், வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டதிலும் 35 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com