ஈரோடு அருகே பஸ் - கார் மோதல்: தாய், மகள் பலி

ஈரோடு அருகே பஸ்ஸும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தாயும் மகனும் பலியாயினர்.
Updated on
1 min read

ஈரோடு அருகே பஸ்ஸும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தாயும் மகனும் பலியாயினர்.

காலை 10 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. ஈரோடு - கொடுமுடி சாலையில் சாவடிப்பாளையம் ரயில்வே கேட் அருகே, ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற பஸ்ஸும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது. அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதாகவும், காரின் மீது முழுவதுமாக ஏறி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாயினர். இவர்கள் இருவரும் தாயும் மகனும் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com