

பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரிய தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார் பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் யுவராஜா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய யுவராஜா...
"இந்திய எல்லைப் பகுதியில் தேசப் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது.
ஐநா சபை விதிகளை மீறி செயல்பட்டு வரும் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க இந்தியா நிர்பந்திக்க வேண்டும். பாகிஸ்தான் உடனான உறவுகளை பிற நாடுகள் துண்டிக்க வேண்டும்.
இந்தியாவுடனான போரில் ஏற்கெனவே 2 முறை பாகிஸ்தான் தோற்றுள்ளது. இருந்தும் பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் இ.பி.ரவி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்.டி.சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் எஸ்.சேகர், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு பொதுச்செயலர் கே.என்.பாஷா, சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.