மதுரை அருகே இன்று அதிகாலை சரக்குவேனும், அரசு பஸ்ஸும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல் செண்பகனூரைச் சேர்ந்தவர் பவுல்ராஜ் (25). இவர் லாரி ஓட்டுநர். இவர் மதுரையிலிரு்ந்து கொடைக்கானல் பகுதிக்கு தினமும் சரக்குவேனில் காய்கறிகளை ஏற்றிச்செல்வது வழக்கம். சனிக்கிழமை அதிகாலையில் அவர் காய்கறிகளுடன் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டார்.
வேனில் உதவியாளராக சுகுமாரன் (21) இருந்தார். மேலும் செண்பகனூரில் கடை வைத்திருக்கும் டேனிசன் (19) வேனில் சென்றுள்ளார். பரவை அருகே உள்ள தனியார் தீம் பார்க் பகுதியில் வேன் சென்றபோது திருப்பூரிலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்ஸுடன் வேன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தி்ல் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் வேனில் இருந்த கிளீனர் சுகுமாறனும், டேனிசனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஓட்டுநர் பவுல்ராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல, பஸ்ஸில் இருந்த ஓட்டுநர் ராஜேந்திரன், கிளீனர் சௌந்தரராஜன் மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ், அவரது மனைவி முருகேசுவரி, மூதாட்டி அய்யம்மாள் (50) உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.