மதுரையில் லோடு வேன் - பஸ் மோதல்: 2 பேர் பலி

மதுரையில் வேனும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாயினர். 10 பேர் காயமடைந்தனர்.
Updated on
1 min read

மதுரையில் வேனும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாயினர். 10 பேர் காயமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தும், மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லோடு வேனும் சமயநல்லூர் பரவை அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாயின. இதில், கொடைக்கானலைச் சேர்ந்த சுகுமாரன், டென்னிசன் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பரவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com