மன்னார்குடியில் நில தரகர் கடத்தல்

சங்கரபாண்டியன்(57).இவர் இடம் வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்துவந்துள்ளார். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சுந்தபாண்டியனிடம் தொலைபேசியில் பேசியவர்கள் இவருக்கு
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் நில தரகர் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

நடராஜ பிள்ளைதெருவை சேர்ந்த குப்புசாமி மகன் சங்கரபாண்டியன்(57).இவர் இடம் வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்துவந்துள்ளார். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சுந்தபாண்டியனிடம் தொலைபேசியில் பேசியவர்கள் இவருக்கு சொந்தமான இடம் வடசேரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி எதிரில் உள்ளதை பார்வையிட்டு அளக்க வந்துள்ளதாக கூறி அழைத்துள்ளனர்.இதனை அடுத்து நிலத்திற்கான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு சுந்தரபாண்டியன் தனது பைக்கில் சென்றுள்ளார்.

இரவு நெடுநேரம் ஆகியும் சுந்தரபாண்டியன் வீடு திரும்பாததை அடுத்து அவரது குடும்பத்தினர்.சம்மந்தபட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது.அங்கு சுந்தபாண்டியன் இல்லை.அவர் ஓட்டி வந்த இரு சக்கர வானமும் அதில் மாட்டியிருந்த பையில் இடத்திறகான பத்திரம் உள்பட ஆவணங்கள் அனைத்தும் இருந்துள்ளது.இது குறித்து சுந்தரபாண்டியனின் தம்பி பாஸ்கர், மன்னார்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் சுந்தபாண்டியன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டிருநதார்.இது குறித்து வழக்கு பதிந்து போலீஸார் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com