பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 1வது நடைமேடையில் நிற்க வேண்டும்: பொதுமக்கள் மனு

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், கடையநல்லூர் ரயில்வே நிலையத்தில் தற்போது
Updated on
1 min read

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், கடையநல்லூர் ரயில்வே நிலையத்தில் தற்போது 2 வது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில், இந்த ரயிலை 1 வது நடைமேடையில் நிறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மதுரை மண்டல மேலாளர் கோயல், செங்கோட்டைக்கு ரயில் நிலையம் மற்றும் பாதை ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் வந்த இருப்புப்பாதை ஆய்வு வண்டியினை கடையநல்லூரில் மறித்து, அவரிடம் தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com