மதுரையில் விஸ்வரூபம் திரைப்படம் 6 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல் முறையீட்டு விசாரணைக்குப் பின்னர் திரையிடப்படலாம் என்று காத்திருந்தனர் 5 திரையரங்கு உரிமையாளர்கள்.
இந்நிலையில், திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி படம் ஓடிய 12 வது நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.