தூத்துக்குடியில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்குவீரபாண்டியாபுரம் டி.குமாரகிரியை சேர்ந்த ராமசுப்பு மகள்ரூபிகா(17), தூத்துக்குடி கால்டுவெல் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டுபடித்து வந்தார். கடந்த 18.12.2010 அன்று குப்பைகளை கொட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற ரூபிகா திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தபோதுகிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள கால்வாய் பகுதியில் ரூபிகா சடலமாக கிடந்தார். அவர் அணிந்து இருந்த ஆடைகள் கிழிந்து இருந்தன. உடலில் பலஇடங்களில் நகக் கீறல்கள் இருந்தன.
இதுகுறித்து சிப்காட் லீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். விசாரணையில்மாணவி ரூபிகா பாலியல் பலாத்காம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதுதெரிய வந்தது. இதுதொடர்பாக, அதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்மாடசாமியை (22) போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட விரைவு நீதிமன்றம் என் 2-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷணவள்ளி இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட மாடசாமிக்கு கொலை குற்றத்திற்காக 14ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பலாத்காரம் குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையெடுத்து, மாடசாமி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.