தூத்துக்குடியில் நடைபெற்ற பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி அணி முதலிடத்தைப் பிடித்தது. அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுபாட்டு குழு மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுக விளையாட்டு குழு ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் கடந்த28-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, விசாகப்பட்டினம்,பாரதீப், மும்பை ஆகிய 6 பெரிய துறைமுகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் நடைபெற்று வந்த போட்டியின் இறுதி ஆட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில்தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், கொல்கத்தா துறைமுக அணியும் மோதின.இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது.முதல் பாதி வரை இரு அணி வீரர்களும் கோல் போட முடியாத அளவுக்கு விளையாட்டுவிறுவிறுப்பாக இருந்தது.
இருப்பினும், இரண்டாவது பாதி ஆட்டத்தின்போதுதூத்துக்குடி வஉசி துறைமுக அணி வீரர் சார்லஸ் சிறப்பான கோலை அடித்ததன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.தொடர்ந்து இறுதிவரை இரு அணி வீரர்களும் வேறு கோல் ஏதும் போடாததால் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது. கொல்கத்தா அணிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சென்னை துறைமுக அணியும்,விசாகப்பட்டினம் துறைமுக அணியும் மோதின. இதில் 4 -2 என்ற கோல்கணக்கில்விசாகப்பட்டினம் அணி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்கலந்து கொண்டு முதலிடம் பிடித்த தூத்துக்குடி வஉசி அணிக்கு வெற்றிக்கோப்பையை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, மற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழக தலைவர் (பொறுப்பு) சு. நடராஜன்,துறைமுக விளையாட்டுக் குழுத் தலைவர் மோகன், செயலர் அசோக்குமார்,பொருளாளர் ரகுபதி, உயர் கணக்கு அதிகாரி முரளிதரன், துணை ஆய்வாளர் குப்தா,கண்காணிப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.