மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில்

News image
Updated On :2 ஜூலை 2013, 5:15 am

மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று, புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் இயங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிடி ஸ்கேன் எடுக்க வந்த நோயாளிகள், சிடி ஸ்கேன் மையத்தை அடித்து நொறுக்கினர்.

இதேப்போல, நேற்று இரவு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த நோயாளிகள் சிலர், சிகிச்சை அளிக்க காலதாமதமாகிறது என்று கூறி மருத்துவமனையின் சில பகுதியை அடித்து நொறுக்கினர்.

இதனால், மருத்துவமனையில் பணியாற்றும் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி, மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் இன்று வேலை நிறுத்தம் அறிவித்து மருத்துவமனைக்கு வெளியே இருந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், சிகிச்சை அளிக்கப்படாததால், ஆத்திரமடைந்து ஆம்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்து வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.