மாணவியைக் கடத்த முயற்சி: கார் பறிமுதல், 4 பேர் கைது

மதுரையில் வியாழக்கிழமை இரவு கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காரில் வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையில் வியாழக்கிழமை இரவு கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காரில் வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தினேஷ் (22). இவர் பிளஸ் 2 படிக்கும் போது தன்னுடன படித்த கரிமேடு சேர்ந்த மாணவியைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.  மாணவி தற்போது கல்லூரியில் படித்துவருகிறார். தினேஷ் பட்டப்படிப்பு முடித்து தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக அவரை சந்திப்பதை மாணவி தவிர்த்துவந்துள்ளார். இந்நிலையில் மாணவி சக தோழியருடன் பெத்தானியபுரம் அண்ணா மெயின் வீதியில் நடந்துவந்துள்ளார்.

  அப்போது அங்கு காரில் வந்தவர்கள் மாணவியை இழுத்து கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியுடன் வந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் காரை சூழ்ந்து நிறுத்தியுள்ளனர். பின்னர் கரிமேடு போலீஸார் வந்து காருடன் அதிலிருந்த தினேஷ் தந்தை, தாய் உள்ளிட்ட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com