நாளை முதல் நெல்லை- செங்கோட்டைக்கு கூடுதல் பயணிகள் ரயில்

இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் சங்கங்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தன.
Updated on
1 min read

திருநெல்வேலி- செங்கோட்டை வழித்தடத்தில் நாளை (ஜூலை 9) முதல் மேலும் ஒரு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் சங்கங்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில்  நடைமேம்பாலத் திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளதாகவும், இதற்கான ரயில் பெட்டிகள் கிடைக்கப்பெற்றதும் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்தக் கூடுதல் பயணிகள் ரயில் நாளை முதல்  இயக்கப்படவுள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நாளை காலை 6.45 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் ஏ.கே. ரஸ்தோகி உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  செந்தூர்பாண்டியன், திருநெல்வேலி மேயர் விஜிலா சத்தியானந்த், மக்களவை உறுப்பினர் ராமசுப்பு, சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com