செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ800 லஞ்சம் பெற்ற சமூகநல விரிவாக்க அலுவலர் கைது

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவநல்லூரை சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்,மாரியம்மாள்.இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு,மாரியம்மாள்
Updated on
1 min read

தமிழகஅரசின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான நகலை வழங்க ரூ800 லஞ்சம் பெற்ற சமூகநல விரிவாக்க அலுவலர் இன்று கைது செய்யப்பட்டார்.

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவநல்லூரை சேர்ந்த தம்பதியினர் சிவகுமார்,மாரியம்மாள்.இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு,மாரியம்மாள் கருத்தடை செய்துள்ளார்.இதனையடுத்து இரண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்திற்காக தமிழக அரசு வழங்கும் நிதி உதவி திட்டத்திற்கான பத்திரத்தின் நகல் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அந்த நகலைப் பெறுவதற்கு சிவகுமார்,செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சமூகநல விரிவாக்க அலுவலராக பணிபுரியும் வள்ளியம்மாளிடம் அணுகியுள்ளார்.வள்ளியம்மாள், பத்திர நகலை வழங்குவதற்கு ரூஆயிரம் லஞ்சமாக கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சிவகுமார்,திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் செய்தார்.இதனையடுத்து,போலீஸ் டி.எஸ்.பி.தங்கசாமி,ஆய்வாளர் ஆதிஷ்,காவலர்கள் பாண்டி,சீதாராமன்,பிரகாஷ்,தெய்வக்கண் ஆகியோர் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மறைந்து நின்றிருந்தனர். சிவகுமார்,ரூ800ஐ லஞ்சமாக வள்ளியம்மாளிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com