சேலம் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 பேர்களை மற்றொரு வழக்கில் மதுரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கடந்த ஆண்டு மதுரையில் இருந்து தேவர் குரு பூஜைக்கு சென்றவர்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் கார்த்திக், மணிகண்டன், முத்து விஜய், விக்னேஷ் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இவர்கள் நால்வர் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து 4 பேர்களும் செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ஏற்கெனவே வெளியில் காத்திருந்த மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர், 4 பேர்களையும் மற்றொரு வழக்கில் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

