தேசிய இளைஞர் விருது பெற தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

ஆண்டுதோறும் ஜனவரி-12ம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான இளைஞர் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், மத்திய மாநில அரசால் அங்கிகாரம் பெற்று சமூக நலன் மற்றும் தேசிய
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தேசிய இளைஞர் விருது பெற, தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

ஆண்டுதோறும் ஜனவரி-12ம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான இளைஞர் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், மத்திய மாநில அரசால் அங்கிகாரம் பெற்று சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வ அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் 1.4.2012 முதல் 30.3.2013 வரையில் செய்த இளைஞர் நலப்பணிக்காக வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருது பெற இளைஞர் தன்னார்வ குழுக்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். இக்குழுக்களில் வயது 13 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், நிதி ஆதாரம் பெறாமல் தன்னார்வ அடிப்படையில் சேவைப்பணி செய்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த விருது பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. அதேபோல், மத்திய, மாநில மற்றும் பல்கலைக்கழகங்கள், இதர அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் விண்ணப்பிக்கவே வேண்டாம்.

இச்சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசு விதிமுறைப்படி கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டும், எந்தவித லாப நோக்கம் இல்லாமலும் பணியாற்றிருக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்விருது பெற்ற நிறுவனம் மறுபடியும் விண்ணப்பம் செய்யக் கூடாது. இதில், சமுதாய பணியாற்றியதறகான ஆதாரங்கள், குறிப்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

எனவே இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in இணை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதோடு, இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 3 நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு  இம்மாதம் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை ஆட்சியர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து மாநில் அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அதையடுத்து, மாநிலக் குழுவில் வைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com