நகை மோசடி: போலீஸ்காரர் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவு

மதுரை அருகே நகை மோசடி வழக்கில் சஸ்பெண்ட் போலீஸ்காரர் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவான நிலையில் அவர்களைத் தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்
Updated on
1 min read

மதுரை அருகே நகை மோசடி வழக்கில் சஸ்பெண்ட் போலீஸ்காரர் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவான நிலையில் அவர்களைத் தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மதுரை தபால்தந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனுசுயா. இவருக்கு குறைந்த விலையில் நகை வாங்கித்தருவதாகக் கூறி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி, அவரது கணவர் ராமானுஜம் உள்ளிட்டோர் ரூ.64 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

 இதுதொடர்பாக அனுசுயா அளித்த புகாரின் பேரில் ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து நீலாவதி, ராமானுஜம் மற்றும் அவர்களது மகள், மருமகனை புதன்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் சுதாகர் மற்றும் ரவிகுமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

  இதில் சுதாகர் என்பவர் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ்காரர் என்றும்,  பணியில் இருந்து தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமறைவானவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com