தென்காசியில் சுவாமி சந்நிதித் தெருவில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தேவிகா தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர், 7 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர். தென்காசி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் குறித்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், ஒரு கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.