ரூ.74800 நஷ்ட ஈடு வழங்க மதுரை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர்வு மன்றம் தீர்ப்பு

சிங்கப்பூரைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிங்கபூரிலிருந்து இங்கிலாந்து செல்லவும், மீண்டும் இங்கிலாந்திலிருந்து சிங்கபூருக்கு வருவதற்கு 2 டிக்கெட்டுகளை
Updated on
1 min read

சிங்கப்பூரைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிங்கபூரிலிருந்து இங்கிலாந்து செல்லவும், மீண்டும் இங்கிலாந்திலிருந்து சிங்கபூருக்கு வருவதற்கு 2 டிக்கெட்டுகளை மதுரை மேலபெருமாள்மேஸ்திரி வீதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.62750 ஐ கொடுத்து முன்பதிவு செய்து இரண்டு டிக்கெடுகளை வாங்கினார்.

இந்நிலையில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கிருந்து இங்கிலாந்து செல்வதற்கு விமான நிலையத்தில் டிக்கெட்டை காண்பித்தபோது அது முந்தய மாதம் டிக்கெட் என்பது தெரியவந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை ரவி தொடர்பு கொண்டபோது, இங்கிலாந்து செல்ல மறுநாள் பயண சீட்டை தந்தனர். ஆனால் இங்கிலாந்திலிருந்து மீண்டும் திரும்பி வர பயணசீட்டு வழங்கப்படவில்லை.இதனால் அவர் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.44800 கொடுத்து பயணசீட்டு வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து சம்பந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது மதுரை நுகர்வோர் குறைதீர்வு மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த அதன் தலைவர் தெய்வராஜ், விசாரணையில் அந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரவிக்கு திரும்பிவர செலவு செய்த கட்டணம் ரூ.44800,மனுதாரின் மன உளைச்சல் அடைந்ததற்காக ரூ.25000 மற்றும் வழக்கு செலவு ரூ. 5000 என மொத்தம் ரூ.74800 ஐ வழங்க உத்தரவிட்டனர்.விசாரணையின்போது எதிர் தரப்பினர் ஆஜராகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com