மதுரை மருத்துவமனையில் குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மதுரை மருத்துவமனைக்கு வந்த தாய், குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.
Updated on
1 min read

குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மதுரை மருத்துவமனைக்கு வந்த தாய், குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.

மதுரை சிலைமானைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி 23 மகன் முகேஷ் கண்ணன் (இரண்டரை வயது) குழந்தைக்கு தடுப்பூசி போட புதன்கிழமை மதுரை மருத்துவமனைக்கு வந்தார் தமிழ்செல்வி. ஆனால், பின்னர் அவர் வீடு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. இதனால், அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே பொம்மபட்டியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரின் குழந்தை அண்மையில் கடத்தப்பட்டது. அந்தக் குழந்தை இன்னும் கண்டறியப்படாத நிலையில், இன்றும் இரண்டரை வயதுக் குழதையுடன் தாய் மாயமாகியிருப்பது அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com