மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆட்டோ ஓட்டுநர் மர்ம சாவு விசாரணை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில நிர்வாகி திருமாறன்  கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பா.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஆ.ராதிகாவிடம் அளித்த மனு விவரம். விருத்தாசலம் வட்டம் பூலாம்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(21). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 16-ம் தேதி லட்சுமணபுரம் தனியார் பள்ளி அருகே அடிப்பட்ட நிலையில் கிடந்தார்.

Updated On :18 ஜூலை 2013, 10:43 am

ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில நிர்வாகி திருமாறன்  கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பா.தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் எஸ்பி ஆ.ராதிகாவிடம் அளித்த மனு விவரம். விருத்தாசலம் வட்டம் பூலாம்பாடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன்(21). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 16-ம் தேதி லட்சுமணபுரம் தனியார் பள்ளி அருகே அடிப்பட்ட நிலையில் கிடந்தார்.

 அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் விபத்தினால் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. 

 அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் முன்விரோதம் உள்ளது. ஆகவே மணிகண்டன் இறப்பு குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். அவர் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.