சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஏற்காடு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெருமாள் மரணம்

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பெருமாள் (62) மாரடைப்பால் வியாழக்கிழமை இன்று மரணமடைந்தார்.

News image
Updated On :18 ஜூலை 2013, 3:09 am

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பெருமாள் (62) மாரடைப்பால் வியாழக்கிழமை இன்று காலை மரணமடைந்தார்.

 ஆத்தூர் வட்டம் தும்பல் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள், கடந்த 1977-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வந்தார். சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலர், ஏற்காடு தொகுதி செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்துள்ளார்.

 ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமாள், கடந்த 1991 - 1996 வரையிலான காலகட்டத்திலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளர் சி.தமிழ்ச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமாள், சுமார் 37,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

 பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெருமாளுக்கு வியாழக்கிழமை அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

 ஏற்காடு எம்.எல்.ஏ. மறைந்த தகவலைக் கேள்விப்பட்டதும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மருத்துவமனைக்கு சென்று மறைந்த எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாளுக்கு பி.சரோஜா என்ற மனைவியும் ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.