நகைக்கடையில் 4.5 கிலோ வெள்ளி கொலுசுகளைத் திருடியவர் கைது

மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த புதன்கிழமை அனுப்பானடியைச் சேர்ந்த பாட்ஷாகனி (47) வந்துள்ளார். அவர் நகை வாங்குவது போல நடித்துள்ளார். பின்னர் கொலுசு வாங்குவதாகக்
Updated on
1 min read

மதுரையில் பிரபல நகைக்கடையில் 4.5 கிலோகிராம் வெள்ளிக்கொலுசுகளைத் திருடியவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மதுரை நேதாஜி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த புதன்கிழமை அனுப்பானடியைச் சேர்ந்த பாட்ஷாகனி (47) வந்துள்ளார். அவர் நகை வாங்குவது போல நடித்துள்ளார். பின்னர் கொலுசு வாங்குவதாகக் கூறியவர் நீண்டநேரம் அவற்றை பார்த்துவிட்டு பின்னர் வாங்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் கடையிலிருந்த 56 ஜோடி கொலுசுகளை காணவில்லை. அப்போது கடையிலிருந்த விடியோவைப் பார்த்தபோது அனுப்பானடியிலிருந்து வந்தவர் எடுத்துச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது. கடையிலிருந்து விடியோ காட்சி சி.டி.யுடன் தெற்குவாசல் குற்றப்பிரிவில் கடையைச்சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர்.

குற்றப்பிரிவு உதவி ஆணையர் மலைச்சாமி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஏ.மலைச்சாமி தலைமையில் தனிப்படையினர் விசாரித்து பாட்ஷாகனியைக் கைது செய்தனர். அவர் வீட்டில் வைத்திருந்த கொலுசுகளை போலீஸார் கைப்பற்றினர்.   திருடிய கொலுசுகளை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருந்துக்கடைகாரரிடம் கொடுத்துவைத்திருந்ததாகவும் பாட்ஷாகனி தெரிவித்தார்.பாட்ஷாகனி மீது கோவையில் நகை திருடியதாகவும், கோயில்பட்டி மற்றும் மதுரை திலகர்திடல் பகுதியில் நகை திருடிய வழக்குகளும் உள்ளன. ஏற்கெனவே உள்ள பாட்ஷாகனியின் புகைப்படத்தை வைத்தே அவரை கைது செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com