மாநில அளவிலான ஹாக்கி போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

விருதுநகர் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில் மாநில அளவில் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 18ம் தேதி வரையில் ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்
Updated on
1 min read

விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவில் நடந்த ஹாக்கி போட்டியில் செனனை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

விருதுநகர் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில் மாநில அளவில் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 18ம் தேதி வரையில் ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த மாணவர்களுக்கான போட்டியில் 16 மாவட்ட பள்ளி அணிகளும், அதேபோல் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெண்களுக்கான போட்டியில் 16 மாவட்ட அணிகளும் என கலந்து கொண்டு விளையாடினார்கள்.

இப்போட்டியின் இறுதியில் மாணவர் பிரிவில் சென்னை ஒய்.எம்.ஜி.ஏ பள்ளி அணியும், மதுரை விளையாட்டு விடுதி அணியும் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கோல் யாரும் போடாததால் டைபிரேக்கர் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு காளிமார்க் கணேசநாடார் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. அதேபோல், பெண்கள் அணியின் இறுதி போட்டியில் சென்னை மாவட்ட அணியும், நாகப்பட்டினம் மாவட்ட அணியும் மோதியது. இதிலும், 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் செயலாளர் ரேணுகா லெட்சுமி, கேவிஎஸ் பள்ளியின் பொருளாளர் கனகவேல், விருதுநகர் மாவட்ட ஹாக்கி பிரிவின் சங்க செயலாளர் டி.ரமேஷ், தலைவர் வெங்கடேஷ், பெண்கள் பிரிவு செயலாளர் ஷீலிகா புளாரன்ஸ், நோபிள் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விருதுநகர் மாவட்ட ஹாக்கி சங்கத்தினர் செய்திருந்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com