சாராயம் பதுக்கிய மூன்று பேர் கைது
திண்டிவனம் கிடங்கல் -2 பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் அப்பகுதியை சேர்ந்த சிலம்பு(28) என்பவரிடமிருந்து 120 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்


திண்டிவனம் பகுதியில் போலீஸார் நடத்திய சாராய வேட்டையில் மூன்று இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டுள்ளனர்.
திண்டிவனம் கிடங்கல் -2 பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் அப்பகுதியை சேர்ந்த சிலம்பு(28) என்பவரிடமிருந்து 120 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பாபு(25) கருணாவூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் 110 லிட்டர் சாராயம் மறைத்து வைத்திருந்தும் கைப்பற்றப்பட்டது.அதே போல் கிடங்கல் -1 பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் முருகன்(42) என்பவர் அவரது வீட்டின் பின் புறத்தில் மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் சாராயமும் 200 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்துள்ள போலீஸôர் அவர்களை கைது செய்து இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...