மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: விருதுநகர் ஆயுதப்படை காவலருக்கு தங்கப்பதக்கம்

மாநில அளவில் காவலருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று விருதுநகர் ஆயுதப்படை காவலர் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன்
Updated on
1 min read

மாநில அளவில் காவலருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று விருதுநகர் ஆயுதப்படை காவலர் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் பாராட்டினார்.

மாநில அளவில் காவலருக்கான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை ஒத்திவாக்கம் மைதானத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் தென் மண்டல அளவில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மயில்வாகனன்(சேத்தூர் காவல் நிலையம்), செல்வக்குமார்(விருதுநகர்-போக்குவரத்து காவல்), மாரியப்பன்(விருதுநகர் கிழக்கு காவல் நிலையம்), முருகேசன்(விருதுநகர்-ஆயுதப்படை பிரிவு) ஆகிய 4 பேர் கலந்து கொண்டனர். இதில், தோன்றி மறையும் டார்க்கெட் பிரிவில் 300 மீட்டர் தூர துப்பாக்கி சுடும் போட்டியில் ஆயுதப் படை பிரிவு காவலர் முருகேசன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்.

இந்நிலையில் தெனமண்டல அளவில் முதலிடம் பெற்ற ஆயுதப்படை பிரிவு காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com