ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பப்புவா நியூஜினிவா தீவு கவர்னர் ஸ்ரீஆண்டாள் கோயில் திருப்பணிக்கு 1 கிலோ தங்கம் வழங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தங்க விமானப் பணி சுமார் 70 கிலோ தங்கம் கொண்டு, இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் பணியானது சுமார் 21 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு

News image
Updated On :20 ஜூலை 2013, 2:37 pm

கோ.ஜெயக்குமார்

வெஸ்ட் பிரிட்டன் அருகேயுள்ள பப்புவா நியூஜினியா தீவின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் திருப்பணிக்கு 1 கிலோ தங்கம் வழங்கியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தங்க விமானப் பணி சுமார் 70 கிலோ தங்கம் கொண்டு, இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் பணியானது சுமார் 21 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட தங்க விமானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப் பணிக்காக ஸ்ரீநாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலம் பக்தர்கள், பொதுமக்களிடம் இருந்து உபயமாக தங்கம் பெறப்பட்டு வருகிறது.

சிவகாசியைச் சேர்ந்த சசீந்திரன் முத்துவேல், தற்போது வெஸ்ட் பிரிட்டன் அருகில் உள்ள பப்புவா நியூஜினியா தீவின் கவர்னராக உள்ளார். இவர் கடந்த ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு உற்சவத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது கோயில் திருப்பணிகளை பார்வையிட்டார். இத் திருப்பணிக்காக தற்போது தனது உறவினர்கள் மூலம் 1 கிலோ தங்கத்தினை கவர்னர் சசீந்திரன் முத்துவேல் கொடுத்தனுப்பியுள்ளார். இதனை அவர்கள் கோயில் தக்கார் தொழிலதிபர் கே.ரவிச்சந்திரனை சந்தித்து வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.