மதுரையில் 12 இடங்களில் பாஜகவினர் மறியல் போராட்டம்

சேலம் மாவட்ட பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் திங்களன்று 12 இடங்களில் பாஜகவினர் மறியல் போராட்டம் செய்தனர்.
Updated on
1 min read

சேலம் மாவட்ட பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் திங்களன்று 12 இடங்களில் பாஜகவினர் மறியல் போராட்டம் செய்தனர்.

இதையடுத்து, 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று பந்த் அறிவித்திருந்தது. எனினும், மதுரையில் இன்று வழக்கம் போல கடைகள் திறந்திருந்தாலும், இந்து மற்றும் பாஜக ஆதரவாளர்கள் நடத்தும் கடைகள் மட்டும் ஆங்காங்கே அடைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல இயங்கின.

இந்த நிலையில், மதுரை பேருந்து நிலையம் அருகே, அண்ணாநகர், ஆரப்பாளையம், காலவாசல், மதுரைக் கல்லுரி உள்ளிட்ட 12 இடங்களில் அந்தந்த பகுதி பாஜக மண்டல் தலைவர்கள் தலைமையில் மறியல் நடைபெற்றது. மறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

பாஜக மாவட்டத் தலைவர் முத்தன்னசாமி, பாஜக மாநில நிர்வாகி சசிராமன் மற்றும் நிர்வாகிகள் கார்த்திக் பிரபுஉள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com