மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொழிலாளியை மிரட்டியதாக 4 பேர் கைது

தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன்காலனியைச் சேர்ந்த பெத்தனசாமி மனைவி மாரியம்மாள்(38). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் முருகன்(47) என்பவரிடம்

Updated On :22 ஜூலை 2013, 12:26 pm

தேனி அல்லிநகரத்தில் செங்கல் காளவாசல் தொழிலாளியை தாக்கியதாக ஞாயிற்றுக்கிழமை 4 பேரை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன்காலனியைச் சேர்ந்த பெத்தனசாமி மனைவி மாரியம்மாள்(38). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் முருகன்(47) என்பவரிடம் ரூ.63 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு, அவரது செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்தாராம், கடந்த 6 மாதங்களாக முருகனின் காளவாசலுக்கு வேலைக்கு போகாமல் இருந்த மாரியம்மாள், சில நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த பரமன் என்பவரது காளவாசலுக்கு வேலைக்குச் சென்றாராம்.

இதனால், முருகன், அவரது மனைவி லதா(37), இதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி நித்யா(23), பெரியகுளம் எஸ்.பி.ஐ.காலனியைச் சேர்ந்த ஜெயக்கொடி(60) ஆகியோர் தன்னை ஜாதியை குறிப்பிட்டு திட்டி, முன் பணமாக பெற்ற தொகையை உடனடியாக திருப்பித் தருமாறு மிரட்டியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிந்து முருகன், லதா, நித்யா, ஜெயக்கொடி ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.